#பெண்கள் உடல் ஆரோக்கியம்
Explore tagged Tumblr posts
dailyvision360 · 2 years ago
Text
0 notes
topskynews · 2 years ago
Text
சோறு வடித்த கஞ்சியுடன் மோர் கலந்து குடிப்பதால் உடலில் நேரும் அதிசயம்
பொதுவாக சாதம் வடித்த அரிசி கஞ்சியை நம்மூரில் உள்ள கிராமப்புறங்களில் மாட்டுக்கு கொடுத்து விடுவதுண்டு,நகர்புறத்து பெண்கள் அதை குப்பையில் கொட்டி விடுவதுண்டு .ஆனால் அந்த அரிசி கஞ்சியில் ஏராளமான நன்மைகள் உண்டு .அதை நாம் குடித்தால் பல மருத்துவ குணம் உள்ளது .அந்த அரிசி கஞ்சியால் நம் உடல் பெறும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்   1.சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகமாய் இருக்கும் .தினமும் ஒரு டம்ளர்…
Tumblr media
View On WordPress
0 notes
imageindiamagazine · 3 years ago
Link
0 notes
tamilindia · 3 years ago
Text
இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க பெண்கள் வாரம் ஒரு முறை ‘உளுந்தங்கஞ்சி’ இப்படி காய்ச்சி குடியுங்கள்! ஆயுசுக்கும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி வராது.
இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க பெண்கள் வாரம் ஒரு முறை ‘உளுந்தங்கஞ்சி’ இப்படி காய்ச்சி குடியுங்கள்! ஆயுசுக்கும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி வராது.
பெண்கள் மட்டும் தான் இந்த கஞ்சியை குடிக்க வேண்டுமா. இல்லை, ஆண்களும் இந்த கஞ்சியை தாராளமாக சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலம், குழந்தை பேறு காலத்தில் உடலில் அதிகமான வலிமை, அதிகமான சத்து தேவைப்படும். ஆகவே, பெண்கள் கட்டாயம் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த உளுந்தங்கஞ்சி எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும். 30 வயதிற்கு மேல் மூட்டு வலி, இடுப்பு வலி என்ற கஷ்டத்தை அனுபவிக்காமல் இருக்கலாம்.…
Tumblr media
View On WordPress
0 notes
jagadeeshkrishnan · 4 years ago
Text
[04/04, 9:59 PM] Jagadeesh KrishnanChandra: “எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.
பணம் சேர வேண்டுமா? “ என���்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
[04/04, 9:59 PM] Jagadeesh KrishnanChandra: "I have no money ...!" Do not lament that there is no money. Money also helps you achieve your life needs and goals. Getting it right, saving better, investing, and making the right economic decisions requires healthy thoughts about money.
Want to join the money? "I always get the wealth I need!" Come to say that. Keep everything from the purse to the purse clean. Think more about your skills without spending your thinking on borrowing and making money at a crossroads.
Want to join the money? "I always get the wealth I need!" Come to say that. Keep everything from the purse to the purse clean. Think more about your skills without spending your thinking on borrowing and making money at a crossroads.
Stop lamenting with strangers about money shortage and just learn its lessons
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
[04/04, 10:49 PM] Jagadeesh KrishnanChandra: தியானம் என்பது மனதுடன் தொடர்புடைய விஷயம். மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.
அமைதியான சூழலில் , மெல்லியக் காற்றின் வருடலில் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி ஒருநிலையில் இருந்தால்தான் அந்த தியானம் முழுமையடையும். தியானம் மதத்தின் அடிப்படையிலும் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
சிலர் தியானத்தின் போது கடவுளிடம் பேசியதாகக் கூறுவார்கள். இதனால் மனம் தெளிவு பெற்றதாகவும் மனம் நிம்மதி அடைந்ததாகவும் கூறுவார்கள். உண்மையில் அறிவியல்படி ஆராயும்போது தியானத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்த ஏதேனும் ஒரு விஷயம்தேவை. அது நம் மனதைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர். அவருடன் பேசினேன் என்பது அவர்கள் தியானத்தின் ஆழத்திற்குள் சென்றதன் வெளிப்பாடு என்றே சொல்ல முடியும். தியானம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் நடைமுறை.
ஆழ்ந்த தியானத்திற்குப்பின் தெளிவு பெற்றதாகக் கூறுவதற்குக் காரணம் மன அழுத்தத்திற்குத் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதே. இதை தேசிய சுகாதார நிறுவனம் 2017 ஆண்டு வெளியிட்ட ஆய்வும் உறுதி செய்கிறது.
இதனால் யோகா , தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன என்பதை கு��ிக்கிறது. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
அதேபோல் உடல் ரீதியாகவும் தினசரி உடல் வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் நீங்கும் என எவிடன்ஸ் பேஸ்டு மெண்டல் ஹெல்த் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. அதில் மனதின் சுயக் கட்டுப்பாடு அதிகரிப்பதாகவும் இதனால், மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்தப் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தியானம் சிறந்தது என்பதையும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் வராது.
தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையில் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தாலும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என 2015 ஆண்டு டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸ் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடுகிறது. தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல் ,மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[04/04, 10:49 PM] Jagadeesh KrishnanChandra: Meditation is something that is related to the mind. Meditation is when the mind is freed from many streams of thought and stands within a certain point. There are many benefits to doing this both physically and mentally.
In a peaceful environment, that meditation is complete only if you close your eyes and calm your mind in the yearning of the gentle breeze. Meditation is also seen as relevant in terms of religion.
Some will say that he spoke to God during meditation. They will say that the mind is clear and the mind is at peace. Meditation really needs something to unify the mind when it comes to scientific research. It should be able to control our mind. They use God for that. I can say that talking to him is an expression of their going into the depths of meditation. Meditation is a practice that has been followed for centuries.
The reason for claiming clarity after deep meditation is that it inactivates the functions of molecules called cytokines associated with stress. This is confirmed by a study published in 2017 by the National Institutes of Health.
This means that any quiet activity like yoga and meditation can relieve stress. When stress is reduced, problems like sleep, peace of mind, anger, disability and loneliness can be solved.
According to a study published by Evidence Based Mental Health, it also eliminates physical and daily ailments such as body aches and headaches. It increases the self-control of the mind and thus cures anxiety, fear, depression and sudden depression. Women in particular are more likely to suffer from these problems during menstruation. That study also indicates that meditation is best for them. Problems such as blood clots and heart attacks do not occur.
The brain is stimulated through meditation. This strengthens the health of the brain. A 2015 study by Trends in Cognitive Science found that meditation can help control any bad habits you may have. Self-control increases as the brain and mind become unified during meditation. Thus paving the way for clear decisions to be made.
The study says that by meditating for at least 20 minutes daily, one can gain physical, mental and brain health, increase self-control and live a happier life.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
0 notes
prasannajothidam-blog · 4 years ago
Photo
Tumblr media
ராசிப்பலன் - 25.01.2020 பிரசன்ன ஜோதிட ஆராய்ச்சியாளர் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சியாளர் ஜோதிடர் DR V.HARIHARAN FOR APPOINTMENT +91 9025865487 ராசிப்பலன் - 25.01.2020 🔯மேஷம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். 🔯ரிஷபம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ��ிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 🔯மிதுனம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். 🔯கடகம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். 🔯சிம்மம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும். 🔯கன்னி இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 🔯துலாம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். 🔯விருச்சிகம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும். உத்தியோக https://www.instagram.com/p/CJLkYWgnKde/?igshid=19hlotjhj4afk
0 notes
gethealthy18-blog · 5 years ago
Text
கசகசா விதைகளின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
New Post has been published on https://healingawerness.com/getting-healthy/getting-healthy-women/%e0%ae%95%e0%ae%9a%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
கசகசா விதைகளின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Tumblr media Tumblr media
கசகசா விதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா! பெரும்பாலும் கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓர் பொருள் என்றே பலரும் அறிந்திருப்பர். ஆனால் சமையலை தாண்டி கசகசா எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடியது.  உங்களது புருவத்தை உயர்த்த செய்யும் அளவு ��ன்மைகளையும், பயன்களையும் அளிக்கக்கூடியது கசகசா. கசகசா விதைகளினால் ஏற்படக்கூடிய நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் பற்றி இப்பதிப்பில் விரிவாக படித்து அறியலாம். 
Table Of Contents
கசகசா விதைகளின் நன்மைகள்-  Poppy Seeds Benefits, Uses and Side Effects in Tamil
‘khus khus‘ என இந்தி மொழியிலும், ‘gasagasalu‘ என தெலுங்கு மொழியிலும், ‘kasa kasa‘ என தமிழ் மொழியிலும், ‘kas kas‘ என மலையாள மொழியிலும், ‘gasegase‘ என கன்னட மொழியிலும், ‘posto‘ என வங்காள மொழியிலும், ‘khush khush‘ என இந்தி மொழியிலும், ‘poppy seeds’ என ஆங்கில மொழியிலும் அழைக்கப்படும் இந்த உணவுப்பொருள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது. இந்த பாப்பி விதைகள், பாப்பி எனும் மலர் தாவரத்திலிருந்து பெறப்படும் எண்ணெய் விதைகள் ஆகும். 
கசகசா விதைகளின் அறிவியல் பெயர் Papaver somniferum – பாப்பாவர் சோம்னிஃபெரம்; இது பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய ஐரோப்பாவில் இவை வளர்க்கப்பட்டு, விற்கப்படுகின்றன. பல வகை உணவு பொருட்கள் தயாரிக்க முழு மற்றும் நில வடிவில் பாப்பி விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாப்பி விதை எண்ணெய் எடுக்கவும் இந்த கசகசா விதைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
கசகசா விதைகளின் வகைகள்
கசகசா விதைகளில் பல வேறுபட்ட வகைகள் உள்ளன; கசகசா விதைகளில் உள்ள சில பிரபல வகைகள் ஆவன:
நீல பாப்பி விதைகள் – இதனை ஐரோப்பியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; பெரும்பாலும் இது மேற்கத்திய பிரட்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
வெள்ளை பாப்பி விதைகள் – இதனை இந்தியன் அல்லது ஆசியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; இது எல்லா வித உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஓரியண்டல் பாப்பி விதைகள் – இதனை ஓபியம் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; இது அபின் விளைச்சல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகிறது.  
கசகசா விதைகளின் (Khas Khas) நன்மைகள்
பாப்பி விதைகள் நன்மைகள் பலவற்றை தருபவை ஆகும்; கசகசா விதைகளினால் ஏற்படும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
கசகசா விதைகள் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் 
கசகசா விதைகள், தூக்கமின்மையை போக்குதல், வாய் அல்சர், செரிமானமின்மையை சரிப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை அளிக்கின்றது; மேலும் இது பெண்களின் இனப்பெருக்க தன்மையை மேம்படுத்துவதோடு புற்றுநோயையும் தடுக்க உதவுகின்றன.
நன்மை 1: செரிமானம்  
கசகசா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அது செரிமானத்திற்கு உதவும். இந்நார்ச்சத்து மலத்தை ஒன்றாக திரட்டி, மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது (1). ஆனால், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நன்மை 2: வாய் புண்கள்
இது குறித்து ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், வாய் புண்களை குணப்படுத்த கசகசா விதைகள் உதவுவதாக நிகழ்வு சான்றுகள் கருத்து தெரிவிக்கின்றன. கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளிக்க உதவி, வாய் புண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.
சில நசுக்கிய உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்; வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடவும். 
நன்மை 3: தூக்கமின்மையை குணப்படுத்தும்
Shutterstock
ஆய்வறிக்கைகளின் கருத்துப்படி, கசகசா விதைகள் கொண்ட பானத்தை பருகுவது உடலில் உள்ள கார்டிசோல்களை குறைக்க உதவுகிறது; இந்த சாந்தப்படுத்தும் விளைவினால், உடலின் அழுத்த அளவுகள் நிச்சயம் குறையும். மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சர்க்காடியன் தாளங்கள் ஒரு நல்ல முன்னேற்றத்தை தருபவையாகும்; இதன் மூலம் தனி நபர்கள் குறைந்த அளவே சோர்வாக உணர்வார்கள்.
பாப்பி விதைகளில், ஓபியம் பாப்பி என்பது தான் தூக்கத்தை தூண்டும் ஒரு பயனுள்ள விளைவை ஏற்படுத்தவல்லது (2). ஆனால், இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்; இதை குழந்தைகளுக்கு அளிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
கசகசா விதைகளை கொண்டு தேநீர் தயாரித்து உறங்க செல்லும் முன் உட்கொள்வது நல்ல உறக்கத்தை பெற உதவும்; கசகசா விதைகளை பேஸ்ட்டாக்கி சூடான பாலில் கலந்து பருக வேண்டும். இதனை தூங்க செல்லும் முன் குடிப்பது நல்லது; ஒரு கப் கசகசா விதை தேநீர், மாயாஜாலம் புரியவல்லது.
நன்மை 4: பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும்
கசகசா விதைகள் பெண்களின் உடலில் உள்ள பெலோப்பியன் குழாய்களில் நல்ல ஓட்டத்தை ஏற்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்க உதவும் ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. குழாய்களில்  இருக்கும் கோழை அல்லது சளி போன்றவற்றை கரையச்செய்து, கருவுறுதலை அதிகரிக்க பாப்பி எண்ணெய் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இந்த முறையை hysterosalpingography – ஹிஸ்டிரோசால்பிங்கோகிராபி என்று ���ழைப்பர்; இந்த பரிசோதனையில் 40 சதவீத பெண்களுக்கு கருத்தரிப்பில் வெற்றி கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் பெலோப்பியன் குழாய்களில் பிரச்சனை உள்ள 29 சதவீதம் பெண்கள், கசகசா விதை நீரை எடுத்துக் கொள்வதன் மூலம், வெற்றிகரமான கருத்தரிப்பை பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது (3).
பாப்பி விதைகள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது; மேலும் இவ்விதைகளில் உள்ள உறுப்புகள் ஆண்மையை அதிகரிக்க மற்றும் பாலியல் ஆசையை தூண்ட உதவுகின்றன.
நன்மை 5: எலும்பு ��ரோக்கியம்
கசகசா விதைகளில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன; இது முதலில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்த உதவுகிறது. பாப்பி விதைகளில் உள்ள இன்னொரு தாதுச்சத்தான பாஸ்பரஸ், கால்சியம் சத்துடன் சேர்ந்து எலும்பு திசுவை உருவாக்க உதவுகிறது மற்றும் இவ்விதைகளில் உள்ள மாங்கனீசு கொலஜன் உற்பத்திக்கு உதவி, தீவிர சேதம் எதுவும் ஏற்படாமல் எலும்புகளை பாதுகாக்க உதவுகிறது.
நன்மை 6: மூளை ஆரோக்கியம்
மூளைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் – போன்ற தாதுச்சத்துக்கள் கசகசா விதைகளில் அதிகளவு அடங்கியுள்ளன. இந்த தாதுச்சத்துக்கள் அனைத்தும் நரம்பு டிரான்ஸ்மிட்டர்களை சரிப்படுத்தி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கசகசா விதைகள் அறிவாற்றல் குறைபாட்டை தடுக்க உதவுகின்றன; இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
நன்மை 7: நோய் எதிர்ப்பு சக்தி
பாப்பி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்க இவ்விதைகள் உதவுகின்றன மற்றும் கசகசாவில் இருக்கும் இரும்புச்சத்தும் இந்த நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டில் உதவுகிறது. 
கசகசாவில் உள்ள ஜிங்க் சத்து சுவாச குறைபாடுகள் ஏற்படுவதை குறைக்க உதவுகின்றன. 
நன்மை 8: இதய ஆரோக்கியம்
கசகசா விதைகள் நார்ச்சத்தினை அதிக அளவு கொண்டுள்ளன; இதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆய்வறிக்கையின் கருத்துப்படி, உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கசகசா விதை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம் (4). இதனை நடைமுறைப்படுத்த பாப்பி விதை எண்ணெயை உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலே போதும், இதய ஆரோக்கியத்தை காக்கலாம்.
கசகசா விதைகளில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் இந்த கொழுப்பு அமில சத்துக்கள் இதயத்திற்கு பெரும் நன்மை புரிபவை ஆகும். டஃப்ட்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின் படி, இவ்விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன – இந்த சத்துக்கள் இதயத்திற்கு நன்மை அளிக்கும் என்ற கருத்து உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றே ஆகும்; மேலும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க இந்த சத்து உதவுகிறது.  ஒமேகா-3 சத்துக்கள் உடலில் உற்பத்தி செய்யப்பட மாட்டாது; ஆகவே இவற்றை பிற உணவுகள் வாயிலாக எடுத்துக் கொள்ள வேண்டும்; இந்த ஒமேகா சத்துக்கள் கசகசா விதைகளில் நிறைந்து உள்ளன. இவ்விதைகளை உட்கொள்வதன் மூலம் ஒமேகா சத்துக்களை பெறலாம்.
நன்மை 9: ஆற்றலை அதிகரிக்கும்
உடலுக்கு ஆற்றல் அளிக்கும் மேக்ரோ ஊட்டச்சத்துக்களான சிக்கலான கார்போஹைட்ரேட்கள் உடலில் அதிக அளவில் இருக்குமாறு வழிவகை செய்யும் பண்பு கசகசா விதைகளில் அடங்கியுள்ளது; இந்த விதைகள் கால்சியம் சத்தை உறிஞ்சி உடலில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள உதவுகின்றன.
நன்மை 10: கண் பார்வை ஆரோக்கியம்
கசகசா விதைகளில் அதிக அளவு ஜிங்க் கனிமச்சத்து உள்ளதால், அது தீவிர கண் நோய்களான மஸ்குலார் குறைபாடு போன்றவற்றை தடுத்து கண்ணின் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது (5). பாப்பி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் கண்களுக்கு பல்வே��ு நன்மைகளை அளிக்கின்றன. பாப்பி விதைகள் நன்மைகள் பட்டியலில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.
நன்மை 11: சிறுநீரக கற்கள்
கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசியம் எனும் கனிமச்சத்து சிறுநீரக கற்களுக்கு எதிராக போராடி சிறுநீரக கற்களை குணப்படுத்தக்கூடியது; மேரிலாந்து மருத்துவ மைய பல்கலைக்கழகத்தின் கருத்துப்படி, ஹைபரோக்ஸால்யூரியா – hyperoxaluria (அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றம் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்) எனும் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவு முறையில் கசகசாவை குறைவான அளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளது (6).
நன்மை 12: மலச்சிக்கல்
பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம்; அவற்றுள் மிக முக்கியமானது அஜீரணம் ஆகும். இந்த செரிமான பிரச்சனையை சரி செய்து தீர்வு வழங்க, பாப்பி விதைகளில் உள்ள நார்ச்சத்து உதவும். ஆகவே மலச்சிக்கல் உள்ள நபர்கள் பாலில் அரை தேக்கரண்டி கசகசாவை கலந்து குடித்தால், நல்ல பலன்களை பெற முடியும்.
நன்மை 13: வலி நிவாரணி
பாப்பி விதை வாஷ் என்பது ஒரு மருத்துவ தேநீர்; இது கசகசா விதைகள் மற்றும் நீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் ஒரு அருமையான மருந்து. வலியில் இருந்து விடுதலை அளித்து, கவலையை போக்கி நல்ல உறக்கத்தை வழங்க உதவுகிறது; இது ஓப்பியாயிடு போன்ற வலி நிவாரணி மருந்துகளுக்கு ஒரு நல்ல மாற்றாகும்.
நன்மை 14: சுவாச ஆரோக்கியம்
சுவாசம் சார்ந்த பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படாமல் தடுத்து, சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்க கசகசா விதைகள் பெரிதும் உதவுகின்றன.
நன்மை 15: புற்றுநோய்
TIME இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி, ஓபியம் கசகசா விதைகளில் உள்ள ஜீன்கள் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்க உதவும் என்ற தகவலை உறுதி செய்துள்ளது (7). இந்த நோஸ்காபின் மருந்து (ஓபியம் பாப்பி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்) புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக போராடி, மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் பெருக்கம் அடைவதை நிறுத்த உதவுகிறது.
இன்னொரு இந்திய ஆய்வின் படி, கசகசா விதைகள் GST எனப்படும் குளுடாதியோன்-S-டிரான்ஸ்பெரஸ் (glutathione-S-transferase) என்று அழைக்கப்படும் கார்சினோஜென் சுத்தப்படுத்தல் என்சைம் அளவை 78% என்ற அளவிற்கு அதிகரிக்க உதவுகிறது; கசகசா விதைகளின் இந்த செயல்பாட்டினால் புற்றுநோயை குணப்படுத்த, பாப்பி விதைகள் சேர்த்த உணவுகளை உட்கொள்வது உதவலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது (8). பாப்பி செடியின் கஷா��ம், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அல்சரை குணப்படுத்த உதவுகிறது (9).
நன்மை 16: தைராய்டு
தைராய்டு சுரப்பிகள் சரிவர செயல்பட ஜிங்க் எனும் தாதுச்சத்து மிகவும் அவசியம். பாப்பி விதைகளில் அதிக அளவு ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. மேலும் அயோடின் சேர்க்கப்பட்ட கசகசா விதை எண்ணெய் உலகம் எங்கிலும் அயோடின் குறைபாட்டை போக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த அயோடின் குறைபாடு தான் தைராய்டு செயலிழப்புக்கு முக்கிய காரணம்; இதை சரி செய்து விட்டால் தைராய்டு பிரச்சனையும் சரியாகி விடும் (10).
நன்மை 17: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
கசகசா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களை தரும். மேலும் இவ்விதைகளில் இருக்கும் மாங்கனீசு சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. 
ஆனால், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, இவ்விதைகளை எடுத்துக் கொள்ள தொடங்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
நன்மை 18: வலி நிவாரணி விளைவு
பழங்காலத்தில் இருந்தே, இந்த பாப்பி விதைகள் வலி நிவாரணி விளைவாக அல்லது வலியிலிருந்து விடுதலை தர உதவி வருகின்றன. ஒரு ஆய்வறிக்கையின் படி, கசகசா விதைகளை வெந்நீரில் கலந்து வலி நிவாரணி விளைவுக்கு பயன்படுத்தலாம் (11).
பர்டியூ பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, ஓபியம் வகை கசகசா விதைகள் வலி நிவாரணி விளைவில் அதிக பயனை தருகின்றன (14).
கசகசா விதைகள் வழங்கும் சரும நன்மைகள் 
Shutterstock
பாப்பி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளை வழங்கக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டி, தோலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த உதவுகிறது; இவ்விதைகள் சருமத்தை சுத்தப்படுத்தி, தோலிற்கு பொலிவை வழங்க உதவுகின்றன.
நன்மை 1: சிரங்கு மற்றும் அழற்சி
கசகசா விதைகள் சிரங்கு நோய்க்குறைபாட்டை சரி செய்ய உதவும் லினோலெனிக் அமிலத்தை அதிகம் கொண்டுள்ளன; பாப்பி விதைகளை நீர் அல்லது பால் என ஏதேனும் ஒன்றில் ஊற வைத்து, பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து மிருதுவான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். தோல் எரிச்சல் மற்றும் சரும அரிப்புத்தன்மையை குணப்படுத்த இந்த பேஸ்ட் உதவுகிறது; இது ஒரு பயனுள்ள வலி நிவாரணியாக செயல்பட்டு, சரும அழற்சி பிரச்சனைகளால் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது.
நன்மை 2: தூய சருமம்
கசகசா விதை ஸ்கிரப் என்பது சருமத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் கறைகளற்ற சருமத்தை பெறலாம். 2 தேக்கரண்டி பாப்பி விதைகளை தயிருடன் கலந்து, அக்கலவையை முகத்திற்கு தடவலாம். முகத்திற்கு தடவும் போது, வட்ட வடிவ இயக்கத்தில் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்; ஒரு காட்டன் பஞ்சு கொண்டு முகத்தை துடைத்து விட வேண்டும். இதன் மூலம் சுத்தமான சருமம் மற்றும் பொலிவான தோலை பெறலாம்.
நன்மை 3: சருமத்தை ஈரப்பதம் ஆக்கும்
கசகசா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் ஒரு நல்ல ��ரப்பதமாக்கியாக செயல்பட்டு, மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தை பெற உதவுகிறது; மிருதுவான சருமம் பெற, பாப்பி விதைகளை ஒரு அரைப்பானில் இட்டு, அதில் சிறிதளவு பால் ஊற்றி பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள், இக்கலவையை சிறிது தேன் கலந்து உபயோகிக்கலாம். இவ்வாறு தயாரித்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்; பின்னர் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, கழுவி விட வேண்டும். வாரம் ஒரு முறை இதை செய்தால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.
கசகசா விதைகள் வழங்கும் கூந்தல் நன்மைகள்
பாப்பி விதைகளில் நல்ல அளவு அன்சாச்சுரேட்டட் அமிலங்கள் மற்றும் தாதுக்களான கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்றவை உள்ளதால், இவை ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவுகின்றன. கசகசா விதைகள் வழங்கும் கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.
நன்மை 1: தலைமுடி வளர்ச்சி
இது குறித்து போதிய தகவல் இல்லை, இருப்பினும் பாப்பி விதைகள் சில சமயங்களில் முடி வளர்ச்சிக்கும் உதவியுள்ளன. ஊற வைத்த கசகசா விதைகளை புதிதாக எடுக்கப்பட்ட தேங்காய் பால், சாறுள்ள வெங்காயம் ஆகியவற்றுடன் கலந்து அரைத்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்னர் ஒரு இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடவும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மேலும் இந்த பேக் முடி பிளவு முனைகளை சரி செய்ய உதவலாம். 
நன்மை 2: பொடுகு
பொடுகு என்பது பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனை தான்; இதனை குணப்படுத்தவில்லை எனில், இதனால் முடி உதிர்வு ஏற்படலாம். பொடுகை குணப்படுத்த, ஊற வைத்த கசகசா விதைகள், தயிர், ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகு  ஆகியவற்றை கலந்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இதை அரை மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும். தொடர்ந்து இந்த கலவையை முடிக்கு பயன்படுத்தி வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கசகசா விதைகளின் (Khas Khas) ஊட்டச்சத்து மதிப்பு
கசகசா விதைகளில் பல்வேறு வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் – கனிமச்சத்துக்கள் அடங்கி உள்ளன; அவை என்னென்ன என்று கீழ்க்கண்ட அட்டவணையில் பார்த்து அறியலாம்:
நியமம் ஊட்டச்சத்து  மதிப்பு RDA -இன் சதவீதம் ஆற்றல் 525 Kcal 26% கார்போஹைட்ரேட் 28.13 g 22% புரதம் 17.99 g 32% மொத்த கொழுப்பு 41.56 g 139% கொலஸ்ட்ரால் 0 mg 0% உணவு முறை நார்ச்சத்து 19.5 g 51% வைட்டமின்கள்  ஃபோலேட்கள் 82 µg 20% நியாசின் 0.896 mg 5.5% பேன்டோதெனிக் அமிலம் 0.324 mg 65% பைரிடாக்சின் 0.247 mg 19% ரிபோஃபிளவின் 0.100 mg 8% தையமின் 0.854 mg 71% வைட்டமின் ஏ 0 IU 0% வைட்டமின் சி 1 mg 2% வைட்டமின் ஈ 1.77 mg 12% வைட்டமின் கே 0 mg 0% எலக்ட்ரோலைட்கள் சோடியம் 26 mg 2% பொட்டாசியம் 719 mg 15% தாதுச்சத்துக்கள்/ கனிமச்சத்துக்கள்   கால்சியம் 1438 mg 144% காப்பர்/ தாமிரம் 01.627 mg 181% இரும்பு 9.76 mg 122% மெக்னீசியம் 347 mg 87% மாங்கனீசு 6.707 mg 292% பாஸ்பரஸ் 870 mg 124% செலினியம் 13.5 µg 24% ஜிங்க்/ துத்தநாகம் 7.9 mg 72%
கசகசா விதைகளை பயன்படுத்துவது எப்படி?
கசகசா விதைகளை உணவுப்பொருட்களை சமைக்க பயன்படுத்துவர் என்று மட்டுமே பலர் எண்ணிக் கொண்டிருக்கலாம்; ஆனால், இவ்விதைகளை எப்படி, என்னென்ன வழிகளில் பயன்படுத்தலாம் என்று கீழே கொடுக்கப்பட்டு உள்ள குறிப்புகள் வாயிலாக படித்து அறியலாம்.  
பாப்பி விதைகள் பயன்படுத்துவதற்கான குறிப்புகள் 
கசகசா விதைகள், அவற்றின் பருப்பு சுவை காரணமாக பல்வேறுபட்ட கலாச்சார��்களில், பல விதமான உணவு ரெசிபிகளில் பயன்படுத்தப்படுகிறது.
கசகசா விதைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் முன், கற்கள் எல்லாவற்றையும் நீக்கி சுத்தமாக கழுவ வேண்டும்.
இவற்றை சூடான நீர் அல்லது பாலில் 2 மணி நேரங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின் அவற்றை வடிகட்டி, உலர வைக்கவும்.
இந்த ஊற வைக்கப்பட்ட விதைகளை தனியாக அல்லது இதர மசாலா பொருட்களுடன் அரைத்து குழம்பு அல்லது  கிரேவி தயாரிக்க பயன்படுத்தலாம்.
பாப்பி விதைகள் சுவை அற்றவை; ஆனால், இவ்விதைகளை சூடுபடுத்தினால், பருப்பு, கார – இனிப்பு சுவையை இவ்விதைகள் கொண்டிருக்கும். வறுத்தால் அல்லது பேக் செய்தால் இலேசான வாசம் மற்றும் இனிப்பு சுவை கிடைக்கும்; ஆழ்ந்து வறுக்கும் பொழுது சிறந்த நறுமண எண்ணெய்கள் வெளிப்பட்டு, அவற்றை அதிகம் மொறுமொறுப்பாக்க உதவும்.
சமையலில் அல்லது ரெசிபிகளில் கசகசா விதைகளை பயன்படுத்துவதற்கான குறிப்புகள்
Shutterstock
கார்னிஷ் பிரட்கள், ரோல்கள், சாஸ்கள் மற்றும் பேஸ்ட்ரி ஃபில்லிங்களில் அல்லது காய்கறிகள் மற்றும் சாலட் ட்ரெஸ்ஸிங்களில் வறுத்த கசகசா விதைகள் சேர்க்கப்படுகின்றன. துருக்கிய உணவு வகைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கசகசா விதைகளை வறுக்க, ஒரு சிறிய வறண்ட பாத்திரத்தை அடுப்பில் – மிதமான நெருப்பில் வைத்து கசகசா விதைகளை இட்டு, 2 முதல் 3 நிமிடங்களுக்கு மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
பாப்பி விதைகள், வெண்ணெய் சேர்த்த முட்டை நூடுல்ஸ், பழ சாலட் ட்ரெஸ்ஸிங்கள், ஈஸ்ட் பிரட்கள் ஆகிய உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் பருப்பு சுவை மற்றும் தன்மை காரணமாக இவை, பிரட்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், குழம்பு வகைகள், மிட்டாய், பான்கேக்குகள் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.
இந்த கசகசா விதைகள் போஸ்டோ என்று மேற்கு வங்காளம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய இடங்களில் அழைக்கப்படுகின்றன; பிரபல வங்காள உணவுகளான உருளைக்கிழங்கு போஸ்டோ – Aloo Posto, சாசுரி- Chachuri, போஸ்டோர் போரா – Postor Bora போன்றவற்றில் இவ்விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கு போஸ்டோ – Aloo Posto என்பது அதிக அளவு பாப்பி விதைகள் சேர்க்கப்பட்டு, கிரீமி தன்மை அளிக்க உதவுகிறது. உருளைக் கிழங்குகளுக்கு பதிலாக வெங்காயம், பீர்க்கங்காய், சிக்கன் அல்லது இறால்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கசகசா பாயசம் என்பது கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும்; இது ஒரு திரவ இனிப்பு உணவு ஆகும். வெள்ளை கசகசா விதைகள், வெல்லம், தேங்காய், பால் போன்றவற்றை கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையின் பொழுது அனார்சா எனும் இனிப்பு உணவை தயாரிக்க கசகசா விதைகள் உதவுகின்றன.
பொடி ஆக்கப்பட்ட பாப்பி விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பஜ்ஜிகள் கிரில் அல்லது வறுக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. நில கசகசா விதைகள், கடுகு எண்ணெய், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் அரிசி கொண்டு ஒரு அரிசி உணவை தயாரிக்கலாம். 
வெல்லம் மற்றும் தேங்காய் போன்றவற்றை கசகசா விதைகளுடன் சேர்த்து ஒரு ஃபிளாக்கி பேஸ்ட்ரி தயாரிக்கலாம் அல்லது ஆழ்ந்து வறுக்கப்பட்ட கராஞ்சி எனும் சுவையான இனிப்பு உணவை தயாரிக்கலாம்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், கசகசா விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் மசாலா, சிக்கன், இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றை கொண்டு வித்தியாசமான, சுவையான உணவுகளை தயாரிக்கலாம்.
ஆஸ்திரேலியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் பிரபல இனிப்பு பேஸ்ட்ரிகளான ஸ்ட்ருடெல் – Strudel மற்றும் Germknödel – ஜெர்ம்க்நோடெல் ஆகியவற்றை தயாரிக்க பாப்பி விதைகள் உதவுகின்றன.
 பாப்பி விதைகளை அரைப்பது மிகவும் கடினமான செயல் ஆகும்; ஒரு பிரத்யேக அரைப்பான் கொண்டு கசகசா விதைகளை அரைக்கலாம். ஆனால், இந்த பிரத்யேக அரைப்பான் இல்லை எனில் முதலில் பாப்பி விதைகளை வறுத்து – பின் அரைத்து கொள்ள வேண்டும். இந்த விதைகளை முழு வடிவம் அல்லது நசுக்கி பயன்படுத்தலாம்; இவற்றை சமைக்கப்படாத உணவுகளான சாலட் போன்ற உணவுகளில் பயன்படுத்தும் போது, சாலட் உணவில் சேர்க்கும் முன் கசகசா விதைகளை வறுக்க வேண்டும்; மேலும் இலேசான  சுவை மற்றும் மணம் வந்தவுடன் பாப்பி விதைகளை சாலட்டில் சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும்.
 நில பாப்பி விதைகளை பேஸ்ட்ரிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்விதைகளை பேஸ்ட்ரிகளில் பயன்படுத்தும் முன், இவற்றை ஊற வைத்து, 1 முதல் 3 மணி நேரங்களுக்கு கொதிக்க வைத்து – அரைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
 இந்த விதைகளை நாண் பிரட்களின் மீது தூவி விடலாம் மற்றும் இதை ஓவனில் சமைத்தால் அது தந்தூர் என்று அழைக்கப்படும்.
கசகசா விதைகளை (Khas Khas) தேர்ந்தெடுத்தல் மற்றும் சேகரித்தல்
தேர்ந்தெடுத்தல்
எந்த ஒரு உணவுப்பொருளாக இருந்தாலும் தேர்ந்தெடுத்தல் என்பது மிகவும் அத்தியாவசியமானது. உணவு வகைகளை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்; கலப்படம் இல்லாத உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது ஆகும். பாப்பி விதைகளை பொறுத்தவரை பல விதமான வகைகள் உள்ளன; இவை தந்தம் பழுப்பு, இலேசான கிரே முதல் அடர்ந்த கிரே, கருப்பு அல்லது நீலம் என பல  நிறங்களில் வேறுபடும். ஐரோப்பியன் பாப்பி வகை உணவான மாவ் – Maw, அடர்ந்த கிரே நிறத்திலும், இந்திய கசகசா வகை தந்தம் பழுப்பு நிறத்திலும், துருக்கி பாப்பி வகை புகையிலை பிரௌன் நிறத்திலும் இருக்கும்.
கசகசா விதைகள் புதிய மற்றும் நில படிவ வடிவங்களில் கிடைக்கின்றன; இவற்றில் அதிக அளவு பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன மற்றும் இவை ஆக்சிஜனேற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவையாக விளங்குகின்றன. இவை எளிதில் ஊசிப்போய் அதாவது கெட்டுப்போய் விடலாம். ந��்ல தரம் கொண்ட கசகசா விதைகளை நல்ல கடையில் இருந்து, புதிய நிலையில் இருக்கும் பொழுது வாங்கி பயன்படுத்தலாம்; இந்த பாப்பி விதைகள் சிறிதாக மற்றும் இலேசாக இருக்க வேண்டியது அவசியம்.
சேகரித்தல்
பாப்பி விதைகளை குளிர்ந்த, வறண்ட, இருண்ட இடத்தில் காற்றுப் புக முடியாத புட்டியில் போட்டு வைக்கலாம். இவ்வாறு சேகரித்தால், கசகசா விதைகள் 6 மாதங்கள் வரை புதிதாகவே இருக்கும். இதனை ஈரப்பதம் உள்ள இடங்களில் இருந்து தள்ளி வைக்க வேண்டும்.
கசகசா விதைகளின் மருத்துவ பயன்கள் 
கசகசா விதைகள் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் ஆகியவற்றை அளிப்பதோடு மட்டும் இல்லாமல், சில மருத்துவ பயன்களையும் அளிக்கக்கூடியவை. கசகசா விதைகளின் மருத்துவ பயன்கள் ஆவன:
கோடெய்ன் மற்றும் மார்ஃபின் போன்றவை கசகசா வித���களில் இருந்து எடுக்கப்பட்டு, அவற்றை இருமலுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் மற்றும் இவற்றை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் கசகசா விதைகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
கசகசா விதைகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்
கசகசா விதைகளினால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்யும். பாப்பி விதைகளினால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்க்கலாம்:
ஒவ்வாமை 
சில மக்களில், கசகசா விதைகளால் ஒவ்வாமை ஏற்படலாம்; சில சமயங்களில் ஒவ்வாமையுடன் சேர்ந்து வாந்தி, படை நோய், கண் வீங்குதல், சருமம் சிவந்து போதல், மூச்சுவிடுவதில் கடினம் ஏற்படல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் அளிப்பதில் உள்ள பிரச்சனைகள் 
சாதாரண அளவுகளை எடுத்துக் கொண்டால் பிரச்சனை எதுவும் ஏற்படாது; கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள், அதிகப்படியான அளவு கசகசா விதைகளை உட்கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே இவற்றை தவிர்ப்பது அல்லது அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
கசகசா விதைகளை பற்றிய பல விரிவான, தெளிவான விஷயங்கள், பாப்பி விதைகள் நன்மைகள், பயன்கள் போன்றவற்றை படித்து அறிந்திருப்பீர்கள்; கசகசா விதைகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. கசகசா விதைகளை பற்றி நீங்கள் அறிந்த விஷயங்கள் மற்றும் இந்த பதிப்பு தங்களுக்கு எப்படி உதவியது என்று கீழ் இருக்கும் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிருங்கள்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாப்பி விதைகள் எவ்வளவு காலத்திற்கு நல்லது?
குளிர்சாதன பெட்டியில் ஒரு காற்றுப்புகாத புட்டியில் வைத்தால், 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். பாப்பி விதைகளை வெளியே வைத்தால், இவை கொஞ்ச காலத்திற்கு நன்றாக இருக்கும்.
குழந்தைகள் கசகசா விதைகளை உட்கொள்ளலாமா?
இல்லை. கசகசா விதைகளில் உள்ள ஓபியட் அளவுகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம்; எனவே மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் பாப்பி விதைகளை குழந்தைக்கு அளிக்கலாம்.
பாப்பி விதைகளால் போதை ஏற்படுமா?
ஆம், ஓபியம் பாப்பி விதைகளால் ஏற்படும்.
கசகசா விதைகளுக்கு பதிலாக எதை பயன்படுத்தலாம்?
சியா விதைகள் அல்லது சப்ஜா விதைகளை, கசகசா விதைகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
பாப்பி விதைகளால் போதை மருந்த��� சோதனையில் தோல்வி ஏற்படுமா?
வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஹெராயின் மற்றும் கசகசா விதைகள் குறிப்பாக ஓபியம் பாப்பி விதைகள் ஆகிய இரண்டும் ஒரே ஆதாரத்தில் இருந்து கிடைக்கின்றன
எடுத்துக்கொள்ள வேண்டிய பாப்பி விதைகளின் சரியான அளவு என்ன?
7 பவுண்ட் உடல் எடைக்கு ஒரு தேக்கரண்டி கசகசா விதைகள் போதுமானது.
Was this article helpful?
Related
The following two tabs change content below.
LATEST ARTICLES
Source: https://www.stylecraze.com/tamil/kasakasa-vidhaikal-nanmaikal-in-tamil/
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
வெயில் சுட்டெரிப்பதால் விருதுநகரில் விற்பனைக்கு வந்தது தர்பூசணி விருதுநகர் : வெயில் கொளுத்தி வருவதால் விருதுநகருக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. விருதுநகர் சந்தைக்கு ஆந்திரா, திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் லாரி, லாரியாக வந்த வண்ணம் உள்ளன. லாரிக்கு 10 டன் வீதம் பழங்கள் வந்து இறங்குகிறது. ஒவ்வொரு தர்பூசணி பழமும் 4 முதல் 10 கிலோ வரை எடையில் உள்ளது. கிலோ ரூ.20 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 300 முதல் 350 கிராம் எடை கொண்ட துண்டு ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தை மாதம் துவக்கத்திலேயே வெயில் கொளுத்தி வருகிறது. கோடையில் வாட்டி எடுக்கும் வியர்குரு, வயிற்று பிரச்னை, உடல்சூடு தீர்வுக்கு நீர்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவதே சிறந்தது. கோடை துவங்கிய நிலையில் வெள்ளரிக்காய், தர்பூசணி வரத்து துவங்கி விட்டது. இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி, குளிர்பான கடைகளை மக்கள் நாட துவங்கி விட்டனர். தர்பூசணியில் 90 சதவீதம் நீர்சத்து உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட்டல் உடல் ஆரோக்கியம், குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். கண் அழுத்த நோய், மாலைக்கண் நோய் பாதிப்பு இருப்போர் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண் குறைபாடு குறையும். முடி கொட்டுதல் தொல்லை தீர்ந்து முடிவளர்ச்சிக்கு உதவும். நெஞ்செரிச்சல் நீங்கும், நார் சத்து, நீர்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது. தர்பூசணியில் வைட்டமின் ஏ,சி,டி, லைகோபீன், சிட்ருல்லின், பொட்டாசியம் சத்துகள் உள்ளன. லைகோபீன், பீட்டா கரோட்டினாய்டு சத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவும். 11 சதவீத வைட்டமின் ஏ, 13 சதவீத வைட்டமின் சி இருப்பதால் மாரடைப்பை தடுக்க உதவுகிறது. நிறமிகள் இருப்பதால் கட்டி, வீக்கம் குணமாகும். லைகோபீன் பெருங்குடல், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். அதிகம் சாப்பிட்டால் அஜீரண கோளாறு, வயிற்று போக்கு, வயிறு உப்பிசம் போன்ற பிரச்னை ஏற்படும். சளி பிரச்னை உள்ளவர்கள் தர்பூசணியை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நீரிழிவு நோய், சிறுநீர�� பிரச்னை உள்ளவர்கள் தர்பூசணியை அளவோடு சாப்பிட வேண்டும். Source: Dinakaran
0 notes
dailyvision360 · 2 years ago
Text
0 notes
topnewsthamizh · 5 years ago
Text
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க 5 மிக எளிய வழிகள்
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க 5 மிக எளிய வழிகள்
ஆண்கள் தங்கள் வாழ்க்கையை வாழ, ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இன்று பெண்கள் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு தொடர்ந்து அவதி��்படுகிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகளையும் அவர்கள் பரிசீலிப்பார்கள். சிலர் தங்கள் உடல்நிலை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து ��ிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம்…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years ago
Text
கர்ப்பிணி பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் என்ன தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் என்ன தெரியுமா? #Pregnancy #Food #ut #uthealth #tamilnews #universaltamil #lka #srilanka
சாதாரண நாட்களை விட கர்ப்பமாக இருக்கும் நாட்களில் பெண்கள் தமது உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் கருதி சில உணவு பழக்கங்களை கடைப்பிடிப்பது சிறந்தது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சைவ உணவுகளை பொறுத்தவரை தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்
பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடைக்கட்டி…
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 கருவுறுதல் சிகிச்சைக்கு முன் உடல் எடையை குறைப்பது பருமனான பெண்களுக்கு பிறப்புகளை அதிகரிக்காது: ஆய்வு | ஆரோக்கியம்
📰 கருவுறுதல் சிகிச்சைக்கு முன் உடல் எடையை குறைப்பது பருமனான பெண்களுக்கு பிறப்புகளை அதிகரிக்காது: ஆய்வு | ஆரோக்கியம்
ஒரு புதிய ஆய்வில், கருவுறாமை சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு எடை இழந்த உடல் பருமன் மற்றும் விவரிக்கப்படாத கருவுறாமை கொண்ட பெண்கள், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு எடை இழக்காதவர்களை விட ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவதற்கான அதிக வாய்ப்பு இல்லை என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு ‘PLOS மருத்துவ இதழில்’ வெளியிடப்பட்டுள்ளது. 20 முதல் 40 வயதிற்குட்பட்ட அமெரிக்கப் பெண்களில் 40 சதவீதம் பேர் உடல்…
View On WordPress
0 notes
sigappurojakal · 6 years ago
Text
சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது !
சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது ! --------------------------------------------------------
பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன், இவன் தனது 12 வயதிலேயே வேத சார்ஸ்த்திரங்கள், புராணங்கள், வில், வாள் வித்தை, கம்பு, சிலம்பம், களரி போன்ற அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான். இவன் வாள், வில் வித்தை மற்றும் களரியில் வல்லவன்.
தனது அவதார நோக்கமான மகிசமூகி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு, தான் நைஸ்ட்டீக பிரம்மச்சாரியாக(உச்சகட்ட பிரம்மச்சரியம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை.
சபரிமலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர். இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துவர். அதாவது அதிகம் அறிவியலை பின்பற்றும் ஒரு கோவில்.
மற்ற கோவில்கள் போல் இது வருடம் முழுக்க இயங்காது. கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது.
ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இரு முடி கட்டி தான் செல்ல வேண்டும். இதற்கு துளசி மணி மாலை, தாமரை மாலை மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துவர்.
48 நாள் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகளை பார்ப்போம் ! -------------------------------------------------------------------
1 - தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளித்த பின் ஐயனின் வழிபாட்டை மேற்கொண்ட பின் உணவு உட்கொள்ள  வேண்டும்.
2 - மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஐயனையே நினைத்து சரணங்களை சொல்லி வர வேண்டும். இழி சொற்களை உதிர்க்கக்கூடாது.
3 - பாய், தலையணை, மெத்தைகளை பயன்படுத்த கூடாது. தரையில் தூய்��ையான ஒரு பருத்தி துணி விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும்.
4 - அசைவம் உண்ணக்கூடாது, மது புகை போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது, முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ, தன்னை அலங்காரம் செய்யவோ கூடாது.
5 - இது ஒரு மிக முக்கிய கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் முடிக்காதோரும் சரி திருமணம் முடித்தோரும் சரி தனது சுக்கிலத்தை வெளிப்படுத்தக்கூடாது.
6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது. தொட்டுப் பேசக்கூடாது.
7 - பிறர் வீட்டில் உண்ணவோ உறங்கவோ கூடாது. கடைகளில் உண்ணக்கூடாது. அதிக காரம் மசாலா கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. உப்பு, புளி, காரம் மிதமாகவே பயன்படுத்த வேண்டும். பசித்தால் பழங்கள் காய்கனிகள் கொட்டை பருப்புகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும்.
8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.
9 - ஒரு வேலை மணி மாலைகள் அறுந்தால் அதை சரி செய்து மீண்டும் அணியலாம். அதில் எந்த தவறும் இல்லை.
10 - காலணிகளை அணியக்கூடாது.
ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளே இவைகள்.
நான்கு வருடம் பல்லாயிரம் பேருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியன் என்ற முறையில் இதன் நன்மைகளை நான் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
48 நாள் கடும் விரதத்தின் நன்மைகள் ! --------------------------------------------------------------------
1 - ஆண்களுக்கு வரும் Azoospermia (விந்தணு பூஜ்ஜியம் ஆகும் இருக்கும் நிலை), விந்தணு நீர்த்துப்போதல் போன்ற மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிக உடற்சூடு ஒரு முக்கிய காரணம். இப்பொழுது பலர் இதற்கு இலட்ச இலட்சமாய் செலவழித்து வைத்தியம் பார்ப்பதை நீங்களே அறிவீர்கள். உடல் சூட்டைக்கூட விந்தணுவால் தாங்க முடியாது என்பதனாலே தான் இறைவன் சற்று உடலை விட்டு தள்ளி விதைப்பையை படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா ! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் தேங்கிய உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறைகிறது. அதுமட்டும் அல்லாமல் பிரபஞ்ச சக்தி அந்நேரத்தில் அவனுக்கு அபரிதமாக கிடைக்கிறது. அவன் உடல் எலும்புகள் வரை ஊடுருவி இருந்த அதிகப்படியான வெப்பம் இந்த குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது படிப்படியாக குறைந்து விந்தணு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளி வர பேருதவி புரிகிறது.
2 - மனதை அமைதியாக வைத்துக்கொண்டு இறை சிந்தனையில் இருக்கும் போது அவனது உடலில் உள்ள அனைத்து ராஜ உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மனதை சரியாக வைத்துக்கொள்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வந்து அவன் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிறது. மேலும் தீஞ்சொற்களை பேசாமல் இருப்பது மூலம் அவனை சுற்றி நேர்மறை சக்திகள் அதிகரிக்கின்றன.
3 - தரையில் பருத்தி துணி விரித்து தலைய��ை வைக்காமல் படுப்பதன் மூலம் இரத்த ஓட்டங்கள் சீர் பெறுகின்றன. உடற்சூடு அதிகம் ஆகாமல் இருக்கும். பூமிக்கும் உடலுக்கும் உள்ள மின்காந்த சக்திகள் சமநிலைபெறும்.
4 - அசைவம் உண்ணாமல் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருக்கும் போது அவனது உடலில் உள்ள கல்லீரல் பலம் பெருகிறது. இதனால் அவனது Body metabolism சீர்பெறுவதுடன், கோபம் குறைந்து எடுத்த செயல் யாவினும் தெளிவானதொரு முடிவு எடுக்க முடிகிறது. 48 நாள் போதை பொருட்களை பயன்படுத்தாமல் விட்டால் எளிதில் அவன் போதை பழக்கம் போன்ற அனைத்து தீய பழக்கங்களில் இருந்தும் வெளி வர முடியும். இதற்காக ஐயப்பனுக்கு மாலை போட பரிந்துரை செய்யும் மருத்துவர்களும் உண்டு.
5 - பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்கும் போது, அதாவது இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்கும் போது, சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கும் போது, காம எண்ணத்தினுள் நுழையாமல் இறை சிந்தனையுடன் மட்டுமே இருக்கும் போது உச்சி முதல் பாதம் வரை உள்ள அவனது அனைத்து அவயங்களில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்பட்டு நல் சிந்தனை, ஆரோக்கியமுடைய புது மனிதனாய் உரு மாறுகிறான். இதனால் Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகளும் குணமாகி குழந்தையின்மை என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லாமல் போகும். வருடத்தில் ஒரு மண்டலம் தன்னை சீர்படுத்திக்கொள்வதால் வருடம் முழுக்க அவனால் இல்லறத்தில் ஆரோக்கியமாக ஈடுபட முடியும். இல்லறம் நல்லறமாக இருக்கும் போது எப்பொழுதும் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமே நிலவும். அனைத்திற்கும் மேலாக பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பவனுக்கு பிறக்கும் குழந்தை முன்னோர்களின் திறமைகளை தனது மரபணுவில் கொண்டு தெளிந்த அறிவுடைய தெய்வீக அம்சம் பொருந்திய குழந்தை பிறக்கும்.
6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்க கூடாது, நெருங்க கூடாது, தொட்டு பேசக்கூடாது. மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் காந்தம் போன்றவர்கள் இவர்களால் பிறர் சக்தியை எளிதாக ஈர்த்துக்கொள்ள முடியும். எனவே ஒரு ஆண் அருகில் வந்தாலோ தொட்டாலோ இவனது சக்திகள் குறைந்துவிடும் என்பதால் இதை சொன்னார்கள்.
7 - பிறர் வீட்டில் உண்ணாமல் உறங்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு நல்ல உணவே கிடைக்கும், நல்ல சக்திகள் அவரது வீட்டினுள்ளேயே தங்கும். மசாலா உணவை தவிர்ப்பதன் மூலம் காம இச்சைகள் கட்டுப்படும்.
8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் போது, இவன் வளர்த்து வந்த பிராண சக்தி விரையம் ஆகாமல் இருக்கும்.
9 - துளசி மணி மாலைகள், தாமரை மாலைகள், ருத்ராட்சங்கள் இவனது காம உணர்வை கட்டுப்படுத்தும்.
10 - 48 நாள் காலணிகளை பயன்படுத்தாமல் இருக்கும் போது. இவனது பாதம் பூமிப்பந்தின் மீது நேரடியாக படும். இதன் மூலம் பூமிக்கும் இவனுக்கும் உள்ள மின்காந்த ஓட்டம் சீர்பெறும், நிலம் பஞ்சபூத சக்தி இவனது உடலில் அதிகரிக்கும் வயிறு, மண்ணீரல் சீராக இயங்கத்துவங்கும். மேலும் வெறும் காலில் நடப்பது மூலம் பாதத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு உச்சி வரை இரத்த ஓட்டமும் சக்தி ஓட்டமும் சீர் பெற்று ஒரு முழுமையான ஆரோக்கியம் நிறைந்த மனிதனாக இவனால் வாழ முடியும்.
48 நாள் இந்த கடும் விரத முறைகளை கடைப்பிடிபதன் மூலம் ஆண்களுடைய Testosterone Harmone சீர் பெற்று, அவனின் ஆண் தன்மை அதிகரிக்கிறது. Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகள் சரியாகிறது. அது மட்டுமா இவனால் அறிவில் சிறந்த மரபு திறமைகளை ஜீன் வழியே பெற்ற வீரம் செரிந்த அ���ுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.
இப்படி ஐயப்ப வழிபாடு முழுக்க முழுக்க ஆண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவனது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரமான விதை இருந்தால் தானே செழிப்பான விருட்சம் வளரும் !
இப்படி ஆரோக்கிய வித்து இருந்தால் தானே ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.
லட்சக்கணக்கான ஆண்கள் மட்டும் ஒரே இடத்தில் இருப்பதால். இவர்களுக்கு ஆண் தன���மை அதிகரிக்கும். Testerone Harmone குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகரித்து பிரச்சனைகள் தீரும். ஆண்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும்.
ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்க்கத் துவங்கிய பின் தான் பந்தள மன்னர் ராசசேகரனுக்கே குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை என்று பார்ப்போம் ! -------------------------------------------------------------------
ஆயிரம் ஆண்டுகளாகவே இங்கு பெண்களை அனுமதிப்பதில்லை.
200 ஆண்டுகளுக்கு முன்பே 1816 ல் பென்ஜமீன் ஸ்பயன் பர்டு, பீட்டர் அயர் கார்னர் என்ற இரு ஆங்கிலேய ஆய்வாளர்கள் திருவிளாங்கூர் கொச்சி மாகாணங்களில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு மக்களின் கலாச்சாரம் பாரம்பரியத்தை  MEMOIR OF THE SURVEY OF THE TRAVANCORE AND COCHIN STATES என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள். அதில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். பூப்பெய்தலுக்கு முன் பேரிளம் பெண்ணிற்கு பின் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக பதிவு செய்துள்ளார்கள். கேரள அரசும் இதை அங்கிகரித்து முக்கிய சாசனமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அதாவது 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. மற்ற பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. பூப்பெய்தல் முன் பருவமும் பேரிளம் பெண்ணிற்கு பின் பருவமும் அனுமதிக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருமுட்டை மாதவிடாய் மூலம் வெளி வரத்துவங்கிய நாட்களில் இருந்து அது நின்று போகும் காலம் வரை அனுமதி இல்லை. இது அவர்களது Fertile காலம்.
சரி இப்பொருது மாதவிடாய் என்றால் என்ன என்று பார்ப்போம். பெண்களுக்கு இரண்டு கருமுட்டை பை உள்ளது. இதில் ஒவ்வொறு மாதமும் வலது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை இடது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை வெளியேறும்.
இப்பொழுது கருமுட்டை கருமுட்டைப்பையில் 14 நாட்கள் வளர்கிறது. வளர்ந்த கருமுட்டை felopian tube வழியாக கருப்பையை 7 நாட்களில் அடைகிறது.
இந்த கருமுட்டையை வரவேற்று வளர்க்க தனது உடலில் உள்ள சத்துக்களை எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து கருப்பை வரவேற்கிறது. இந்த காலத்தில் ஒரு ஆண் விந்தணுவுடன் சேரவில்லை எனில், அந்த சிவப்பு கம்பளத்துடன் அந்த கருமுட்டை 7 நாட்களில் வெளியேறும்.
ஆக மொத்தம் 14 + 7+ 7 = 28 நாட்கள். ஆகவே தான் 28 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் மாதவிடாய் காலமாக உள்ளது.
பெண்களை நிலவுடன் ஒப்பிடுவார்கள். நிலவும் மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே தெரியும். நிலவின் ஒளி கருப்பையை வலுவடையச்செய்யும்.
மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்கு வேண்டும் என பெண்களுக்கு சில வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
1 - இந்த காலத்தில் பெண்கள் காந்தம் போன்றவர்களாய் மாறுவார்கள். இவர்களின் பிராண சக்தி கழிவுகளை வெளி தள்ள மூலாதாரத்தை நோக்கியே செயல்படும். அந்த மூன்று நாள் இவர்கள் Receiving Antenna வாக மாறுவார்கள். தன்னை சுற்றி உள்ள நல்ல சக்திகளாக இருந்தாலும், கெட்ட சக்திகளாக இருந்தாலும் எளிதாக ஈர்த்துக்கொள்வார்கள். எனவே தான் மூன்று நாள் ஓய்வில் ஒரு இடத்தில் இருக்கச்சொன்னார்கள். மாலை நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது என சொன்னார்கள். இந்த காலத்தில் வரும் இரத்த வாடை கெட்ட சக்திகளை ஈர்க்கும் வல்லமை பெற்றது. எனவே தான் வெளியில் சென்றால் கரிகட்டையும் இரும்புத்துண்டும் கொடுத்து அனுப்புகிறோம். இந்த கரித்துண்டும் இரும்பும் கெட்ட சக்திகளை ஈர்த்துக்கொண்டு அவர்களை காப்பாற்றும். இரத்த வாடை மிருகங்களையும் ஈர்க்கும்.
இப்படி இவர்களது உடல் அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும் போது கோவிலுக்கு வந்தால் அங்கு உள்ள விக்ரக சக்திகளுக்கு சிதைவு நிலை ஏற்பட்டு பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் போகும் என்பதனாலேயே கோவிலுக்கு செல்லக்கூடாது என சொன்னார்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களின் சக்தியும்(Energy Level) காணாமல் போகும். யாரேனும் இந்த காலத்தில் இவர்களை தொட்டாலோ அருகில் வந்தாலோ அவர்களது உடலில் சக்திகள் குறைந்து ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதனாலே தான் யாரையும் தொடக்கூடாது என சொன்னார்கள்.
2 - குளிக்க கூடாது. குளித்தால் வெப்பம் குறைந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. பின் அது உள் தங்கி கட்டிகளாக மாறிவிடும்.
3 - சணல் சாக்கில் உறங்க வேண்டும். இது வெப்பத்தை பாதுகாத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவி புரியும்.
4 - தனியாக பொருட்களை பயன்படுத்தியதும், சக்தி நிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைவரும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான்.
5 - எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது இயக்க சக்திகள் அவர்களது கருப்பைக்கு சக்தியை கொடுத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். ஓய்வில் இல்லாமல் வேறு வேலைகளில் இருந்தால் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் pcod pcos போன்ற பல்வேறு நீர்கட்டிகளாக மாறும். இதை கழிவுகள் என்று சொல்ல முடியாது. அந்த கருமுட்டையை வளர்த்த உடல் சேகரித்து வைத்த ஊட்டப்பொருட்கள் எனலாம்.
இன்னும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு. இது அனைத்தும் அவர்களது நன்மைக்காகவே என்பதை நமக்கு மறைத்துவிட்டார்கள்.
சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தால் ! ------------------------------------------------------------------
இப்படி சபரிமலையில் ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வழிபாட்டு முறையில் பெண்களை அனுமதித்தால், பெண் உடலில் ஆண் Harmone அதிகரித்து அப்பெண்ணிற்கு குழந்தை பிறக்காமல் போகும்.
லட்சக்கணக்கான ஆண்கள் ஒன்று சேரும் கூட்டத்திற்குள் பெண்களை அனுமதித்தால் ஆண்களின் ஆன்ம பலம் சீர்குலைக்கப்படும். ஆண் சக்தியின் வீரியம் குறையும். ஆண்கள் எதற்காக செல்கிறார்களோ அதன் பலன் கிடைக்காமல் போகும்.
பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்தால் ஆணின் ஆண் தன்மை சீர்குலையும். பெண்ணின் பெண் தன்மை சீர்குலையும்.
மற்ற ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும் இதுவே முதன்மை காரணம்.
இப்படி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட வழிபாட்டு முறையை கொண்ட கோவிலுக்கு பெண்கள் ஏன் செல்ல வேண்டும் ? பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் பல கோவில்கள் நமது நாடு முழுவதும் உள்ளது. கேரளாவில் கண்ணனூர் அருகில் தளிம்பரம்பா என்று இடத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி, ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
ஒரிசாவில் கேந்திரபாதா என்னும் இடத்தில் சதபையா என்னும் கிராமத்தில் மஞ்சுபாரதி கோவிலில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஒரு மலைக்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.
மற்ற மதத்திலும் இது போல் வழிமுறைகள் உள்ளது ! மும்பையில் உள்ள ஹாஜி அலி என்ற மசூதியில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது போல் இமயம் முதல் குமரி வரை லட்ச உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னமும் நாடு முழுவதும் ஆண்களை மட்டும் அனுமதிக்கும் கோவில், பெண்களை மட்டும் அனுமதிக்கும் கோவில் இலட்சக்கணக்கில் உள்ளது.
நமது கலாச்சாரத்தை அழித்தொழிக்க மெக்காலே கல்விமுறை போட்ட திட்டத்தின் நீட்சியே இது ! இந்த நொடி வரை கலாச்சார சீரழிவு அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
நம்மை அழிக்கத்துடிக்கும் உலகவல்லாதிக்க தீய சக்திகளுக்கு இவை எல்லாம் நன்றாக தெரிந்ததால் தான் சில வெளிநாட்டு அமைப்புகள் மூலம் இயங்கி பெண்களுக்கு அனுமதி பெற்றுத் தந்து கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருக்கும் ஆண்மையையும் காயடிக்க முயற்சி செய்கிறார்கள்.
PETA விற்கு நமது காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ அதே அக்கறை தான் இன்று நம் பெண்கள் மீது வந்துள்ளது.
இவர்களின் நோக்கம் ஆணின் ஆண் தன்மையையும், பெண்ணின் பெண் தன்மையையும் குறைத்து இருவரையும் மலடாக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் வந்த LGBT சட்டம், பெண் வேறு ஒரு ஆணுடன் இருந்தாலும் குற்றமல்ல போன்ற தீர்பை பெற்றதும் இவர்கள் தான்.
மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்தாலும் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என பூஜைகளை நிறுத்திவிட்டு 18 படிக்கட்டின் கீழ் அமர்ந்து வழி மறித்த தந்த்ரீகளுக்கு எனது பாராட்டுக்கள்.
உச்சநீதி மன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னும் பெண்கள் படியில் கால் வைக்க முயன்றால் சபரிமலை மூடப்படும் என்ற பந்தள மன்னர் உத்தரவிற்கு தலை வணங்குகிறேன்.
ஒரு ஆண் நன்றாக இருந்தால் தான் குடும்பம் நன்றாக இயங்கும். பெண்கள் நன்றாக இருக்க முடியும்.
பெண்கள் செல்லக்கூடாது என்று சொன்னது ஒரு ஆண் வீரமும் வீரியம் பொருந்திய ஆணாக இருந்து அடுத்த தலைமுறையை அறிவிற்சிறந்த வீரம் பொருந்திய தெய்வீக குழந்தையை உருவாக்கவே !
இப்படி ஒரு குழந்தை வந்துவிடக்கூடாது என்று பயந்து போன உலக வல்லாதிக்க தீய சக்தி தான் இதை சீர்குலைக்க திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது.
ஒரு சமூகத்தின் ��ிகச்சிறந்த வாழ்வியல் முறைக்கு கட்டுப்பாடுகள் இன்றியமையாதவை, இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான். நாடு நாடாக இருக்காது.
எனவே இந்த நாடு ஒழுக்கம் நிறைந்த நல்வழிப்பாதையில் பயணிக்க உண்மையான ஆன்மீகம் ஒன்றே, ஒரே வழி ! சிறந்த வழி !
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - குறள் 131
நமது உயிரை விட ஒழுக்கத்தை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். இப்பேர்பட்ட பரம்பரையில் வந்த நாம், நம் முன்னோர்களின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு பாடல் ஞாபகம் வருகிறது
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது !
பெண்கள் செல்லக்கூடாது என்று சொன்னது பெண்களின் நன்மை மற்றும் சமூகத்தின் நன்மைக்கும் சேர்த்தே என இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
நன்றி
0 notes
arun2206-blog · 7 years ago
Link
குளிர்காலத்தில் ஏராளமான சரும மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால், வருமுன் காப்பதே மேல் என்னும் பழமொழிக்கேற்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் உடனே ஈடுபட வேண்டியது அவசியம். முக்கியமாக உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அதுவும் கால்சியம் அதிகம் நிறைந்த பாலில் வெல்லத்தை சேர்த்து அன்றாடம் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும். நம் அனைவருக்குமே பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது தெரியும். அத்தகைய பாலில் சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல், வெல்லத்தை கலந்து குடித்தால், நல்ல சுவையுடன் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இக்கட்டுரையில் ஒருவர் பாலில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தி : பால் கால்சியம் வளமான அளவில் உள்ளது. இது எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும். அதுவும் பாலில் வெல்லத்தை சேர்த்து குடித்தால், குளிர்காலத்தில் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானம்: பெரும்பாலானோர் அஜீரண கோளாறால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இதற்கு முறையற்ற வாழ்க்கை முறை அல்லது ஜங்க் உணவுகளை அதிகம் உண்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அஜீரண கோளாறு, மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம் போன்றவற்றில் இருந்து வெல்லம் விடுவிக்கும். அதுவும் பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, அஜீரண கோளாறு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் விடுபடலாம். மூட்டு வலி: எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு பால் மிகவும் நல்லது. பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். கர்ப்ப கால இரத்த சோகை: கர்ப்ப காலத்தில் பெண்கள் சிசுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்பதோடு, தங்களது உடலையும் கவனிக்க வேண்டும். நிறைய பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். ஆகவே தான் மருத்துவ��்கள் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். ஒருவேளை மாத்திரைகளை எடுக்க பிடிக்காவிட்டால், பாலில் வெல்லத்தைக் கலந்து குடியுங்கள். இதனால் இரத்த சோகையைத் தடுக்கலாம். எடை குறைவு : பால் உடல் எடையைக் குறைக்கும் என்பது தெரியுமா? அதுவும் தினமும் பாலில் வெல்லத்தை கலந்து குடிக்க, விரைவில் எடை குறையும். வெல்லம் ஒரு இயற்கை சுவையூட்டி என்பதால், சர்க்கரையால் உடல் பருமனடைவதைத் தடுக்கலாம். சரும ஆரோக்கியம் : குளிர்காலத்தில் தொடர்ச்சியாக சரும பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், சருமம் பொலிவோடு காணப்படவில்லையா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் பாலுடன் சிறிது வெல்லத்தைக் கலந்து குடியுங்கள். இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும். மாதவிடாய் வயிற்று வலி : சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியும், வயிற்று பிடிப்புக்களும் ஏற்படும். இம்மாதிரியான நேரத்தில் பாலில் வெல்லத்தைக் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் தினமும் பாலில் வெல்லத்தைப் போட்டு குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம். மெட்டபாலிசம் : பாலில் வெல்லத்தைக் கலந்து குடிப்பதால் முறையான செரிமானம் நடைபெறுவதோடு, உடலின் மெட்டபாலிச அளவும் மேம்படுத்தப்படும். உடலின் மெட்டபாலிச அளவு சீராக இருந்தால், நாள் முழுவதும் உடலியக்கமும் சீராக இருக்கும். எலும்பு ஆரோக்கியம் : வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாலில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முன்பிருந்ததை விட எலும்புகளை மேலும் வலிமையாக்கும். எனவே தவறாமல் வெல்லம் கலந்த பாலை அன்றாடம் குடியுங்கள் இரத்த சுத்தம்: வெல்லத்தின் முக்கியமான மருத்துவ குணம் என்றால், அது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆகவே உங்கள் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக வேண்டுமானால், பாலில் வெல்லம் கலந்து குடியுங்கள். ஸ்டாமினா அதிகரிக்கும் : சர்க்கரை, வெல்லம் இரண்டுமே கார்போஹைட்ரேட்டுகளை தூண்டி, உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். ஆனால் இந்த இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது சர்க்கரையில் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிம்பிள் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆனால் வெல்லத்திலோ காம்ப்ளஸ் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடைவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும், நீண்ட நேரம் ஆற்றலைத் தக்க வைக்கும். ஆகவே உடலில் ஆற்றல் நிலைத்திருக்க வேண்டுமானால், பாலில் வெல்லம் கலந்து குடியுங்கள்.   http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/vasambu-powder-sweetflag-powder/        
0 notes
tamilwealth-blog · 8 years ago
Photo
Tumblr media
முட்டையை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! தினமும் முட்டையை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் பெற முடியும் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் முட்டையை வெறுமனே சாப்பிடுவதை விட அத்துடன் ஒரு சில பொருள்களை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்  பற்றி இப்போது பார்க்கலாம். முட்டையை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:- முருங்கை கீரை, துவரம் பருப்பு, நெய், முட்டை இவை அனைத்தையும் சேர்த்து தொடர்��்து ஒரு மாதம் சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள் தேங்காய், முட்டை, பால் இவை மூன்றையும் கலந்து சாப்பிட்டால் குழந்தை அழகாகவும், அறிவாகவும் பிறக்கும். உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மீன், முட்டை, பால் இந்த மூன்றையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முட்டை, பாதாம், மீன், வேர்க்கடலை இவற்றை சாப்பிடுவதன் மூலம் பொடுகு பிரச்சனையை சரி செய்யமுடியும். உயரம் குறைவாக உள்ளவர்கள் தினமும் பாலுடன் முட்டை கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
0 notes
totamil3 · 4 years ago
Text
கொடுமைப்படுத்துதல், உடல் பருமன் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே காணலாம்
கொடுமைப்படுத்துதல், உடல் பருமன் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே காணலாம்
ஆண் சகாக்களை விட டீனேஜ் பெண்கள் மனச்சோர்வு அறிகுறிகள் அதிகம் காணப்படுகின்றன. இருப்பினும், உடல் பருமனால் அவதிப்பட்டால் சிறுவர்களின் மன ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல், கொடுமைப்படுத்துதல் என்பது மனச்சோர்வு அறிகுறிகளை வளர்ப்பதற்கான அதிக எடையைக் காட்டிலும் கணிசமான ஆபத்து காரணி. இந்த முடிவுகளை உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினாத்தாள் ஆய்வில் ஆறு…
View On WordPress
0 notes